கொழும்பு டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி; தொடரை கைப்பற்றியது

கொழும்பு டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி; தொடரை கைப்பற்றியது
Updated on
1 min read

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரையும் வென்றது இந்திய அணி.

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

இந்திய அணி தரப்பில் இந்தியாவின் புஜாரா, ரஹானே ஆகியோர் முறையே 133, 132 ரன்கள் குவித்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கி இலங்கை அணி 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 69 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், கருணரத்னே மட்டும் சிறப்பாக விளையாடியதன் விளைவாக சதம் கண்டனர்.

அவ்விருவரைத் தவிர மற்ற வீரர்கள் எவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் இலங்கை 386 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in