Published : 13 Aug 2017 12:01 PM
Last Updated : 13 Aug 2017 12:01 PM

தோனியின் வழிமுறைகளை கோலி கடைபிடிக்காதது நல்ல விஷயம்: மைக் ஹஸ்ஸி கருத்து

விராட் கோலியின் கேப்டன்சியை ரிக்கி பாண்டிங்குடன் ஒப்பிடும் மைக் ஹஸ்ஸி, தோனியின் ஓய்வு, ஆகியவை பற்றி ந்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆங்கில கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து கூறியிருப்பதாவது:

கோலியின் கேப்டன்சி குறித்து நான் மகிழ்வுடனேயே பார்க்கிறேன். அவரிடம் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய உறுதிப்பாடு உள்ளது. கோலியிடம் ரிக்கி பாண்டிங்கின் தலைமைத்துவ பண்புகள் இருப்பதை நான் காண்கிறேன்.

பாண்டிங்கிடம் வெற்றிக்கான தீராத வேட்கை இருக்கும். அணியை அதை நோக்கி நகர்த்திக் கொண்டேயிருப்பார். தோனி ஒரு அருமையான கேப்டன், கோலிக்கு அவரது இடத்தைப் பூர்த்தி செய்வது கடினம்.

ஆனால் விராட் கோலி பற்றிய் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அவர் கேப்டன்சியில் தோனியின் வழிமுறைகளைக் கடைபிடிப்பதில்லை என்பதே. அவர் தனக்கேயுரிய தனித்துவ வழிமுறைகளில் அணியை வழிநடத்திச் செல்கிறார். கோலி தன் ஆளுமைக்கு உண்மையாக இருக்கிறார். இந்திய அணி தற்போது நிலைபெற்று விட்ட ஒரு அணி.

இந்திய கிரிக்கெட்டுக்கு மகிழ்ச்சியான காலக்கட்டமாகும் இது. வீரர்கள் கேப்டனை நம்புகின்றனர், அனைவருக்குமே கோலி போன்ற அணுகுமுறை உள்ளது. நிச்சயம் அயல்நாடுகளில் (இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா) சவால்கள் இருக்கவே செய்யும். கேப்டன் மட்டுமல்ல வீரர்களும் சோதிக்கப்படுவார்கள்.

தோனி பற்றி...

தோனி தன் ஓய்வு பற்றிய முடிவை அவரே எடுக்க அனுமதிக்க வேண்டும். அவர் தன்னால் 2019 உலகக்கோப்பையில் ஆட முடியும் என்று நினைத்தால் அதை யார் சந்தேகிக்க முடியும்? அவர் மிகவும் தன்னடக்கமான நேர்மையான மனிதர். தன்னால் பங்களிப்பு செய்ய முடியாது என்று அவர் நினைத்தால் அணியில் அவர் இருக்க மாட்டார். 36 வயதில் உடல் தகுதியளவில் அவர் இன்னமும் அருமையாகவே திகழ்கிறார். அவருக்கு அவரது ஆட்டம், உடல் தகுதி பற்றி நன்கு அறிந்தவர், உடலை நன்கு பராமரிப்பவர், எனவே எப்போது விலக வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

இவ்வாறு கூறினார் ஹஸ்ஸி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x