Published : 02 Jul 2017 12:00 PM
Last Updated : 02 Jul 2017 12:00 PM

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்றுள்ள மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இன்று தனது 3-வது ஆட்டத்தில் பரமவைரியான பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இங்கிலாந்தின் டெர்பி நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மீண்டும் ஒரு வெற்றியை வசப் படுத்தும் முனைப்பில் இந்திய வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். இந்திய அணி சமீபகாலமாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டி தொடர்களை இந்திய அணி வென்றிருந்தது.

இந்த வெற்றியின் தருணங் களை இந்திய அணியினர் உலகக் கோப்பை தொடரிலும் நீட்டிக்க செய்துள்ளனர். முதல் ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி பந்தாடியிருந்தது.

அதேவேளையில் சனா மிர் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இதுவரை வெற்றியை ருசிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 3 விக் கெட்கள் வித்தியாசத்திலும், இங்கி லாந்து அணிக்கு எதிராக 107 ரன் கள் வித்தியாசத்திலும் அந்த அணி தோல்விகளை சந்தித்திருந்தது.

எனினும் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற அனைத்து வகையிலும் போராடும் என கருதப்படுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதாக அமைய வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த தொடரில் இந்திய வீராங்கனைகள் அனைத்து துறைகளிலும் அற்புத மாக செயல்பட்டு வருகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் ஆதிக் கம் செலுத்திய இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் அசத்தியது. இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சு வீராங்கனைகளான தீப்தி சர்மா, பூனம் யாதவ், ஹர்மான்பிரித் கவுர் கூட்டணி மொத்தமாக 6 விக்கெட்களை வேட்டையாடி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 183 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றினர்.

பேட்டிங்கில் 20 வயதான ஸ்மிருதி மந்தனா சிறந்த பார்மில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்கள் எடுத்த அவர், மேற்கிந் தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத் தில் 108 பந்துகளில் 106 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். கேப்டன் மிதாலி ராஜூம் பேட்டிங்கில் பலம் சேர்த்து வருகிறார். தொடர்ச்சியாக 7 அரை சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்த அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். - பிடிஐ

நேரம்: பிற்பகல் 3 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x