Last Updated : 13 Jul, 2017 10:13 AM

 

Published : 13 Jul 2017 10:13 AM
Last Updated : 13 Jul 2017 10:13 AM

பிரணாய் அசத்தல்

கனடா கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்களான பிரணாய், காஷ்யப் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யப் 21-11, 21-9 என்ற நேர் செட்டில் பெருவின் டேனியல் லா டோர்ரே ரீகலையும், பிரணாய் 21-13, 21-15 என்ற நேர் செட்டில் மெக்சிகோவின் ஜாப் கேஸ்டிலோவையும் வீழ்த்தினர்.

காஷ்யப் 2-வது சுற்றில் ஜப்பான் வீரர் கோகி வாட்டனாபேவுடன் மோதுகிறார். அதேவேளையில் ஸ்காட்லாந்தின் கெய்ரன் மெர்ரீலிஸை சந்திக்கிறார் பிரணாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x