

கனடா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் தோல்வியடைந்தார். அதேவேளையில் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.
கனடாவின் கல்காரி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையின் 2-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரணாய் 21-17, 14-21, 13-21 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரரான கொரியாவின் ஜியோன் ஹயோக் ஜினிடம் தோல்வியடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-17, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் கொரியாவின் சோய் சோக்யு, வான் ஹிம் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.