Published : 31 Jul 2017 10:19 AM
Last Updated : 31 Jul 2017 10:19 AM

டிஎன்பிஎல் தொடரில் இருந்து எல்.பாலாஜி ஓய்வு

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக எல்.பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரானஎல்.பாலாஜி, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் டிஎன்பிஎல்-ல் ஆல்பர்ட் டூட்டி பாட்ரியாட்ஸ் அணிக்காக ஆடினார். இந்நிலையில் இந்த ஆண்டின் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக எஸ்.அரவிந்தை டூட்டி பாட்ரியாட்ஸ் அணி சேர்த்துக்கொண்டுள்ளது. இடதுகை பந்து வீச்சாளரான இவர், தொடக்க ஆட்டக்காரரும் ஆவார். இந்த தொடரில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணி மாற்றும் 2-வது வீரர் இவர். முன்னதாக மாருதி ராகவ் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக சந்தோஷ் சிவ் அணியில் சேர்க்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x