Published : 25 Jul 2017 10:19 AM
Last Updated : 25 Jul 2017 10:19 AM

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு 127 ரன்கள் இலக்கு

டிஎன்பிஎல் 2-வது சீசனில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடி காளை - கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த காரைக்குடி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் அனிருத்தா 52, கேப்டன் பத்ரிநாத் 41 ரன்கள் சேர்த்தனர். கோவை அணி தரப்பில் விக்னேஷ், சையது மொகமது ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து 159 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கோவை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது.

அனிருத் சீதா ராம் 45, பிரதோஷ் ரஞ்சன் பால் 3, சூர்ய பிரகாஷ் 60, ஹரிஷ் குமார் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவையாக இருந்தது. சுனில் சாம் வீசிய 19-வது ஓவரில் ரோஹித் 2 சிக்ஸர்கள் விளாச இந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கணபதி வீசிய 3-வது பந்தில் ரோஹித் பவுண்டரி விளாச கோவை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சையது முஹமது 25 , ரவிக்குமார் ரோஹித் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடரின் 3-வது நாளான நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சதுர்வேத் 35, ரங்கராஜன் 27, அன்வர் 25 ரன்கள் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தரப்பில் ஆர்.சதீஷ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 127 ரன்கள் இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பேட் செய்ய தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x