Last Updated : 19 Jul, 2017 03:08 PM

 

Published : 19 Jul 2017 03:08 PM
Last Updated : 19 Jul 2017 03:08 PM

பேட்ஸ்மென்களை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறேன் என்பதில்தான் எனக்குத் திருப்தி: அஸ்வின் பேட்டி

இலங்கைக்கு எதிரான தொடரில் தனது 50-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின், 49 டெஸ்ட் போட்டிகளில் 275 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகிறார். தன் பயணம் பற்றி அவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

விரல்களில் பந்தை ஸ்பின் செய்யும் வலது கை சுழற்பந்து வீச்சாளராக இருப்பது இன்றைய நாட்களில் எவ்வளவு கடினம்?

என் இருதயம் படபடவென அடித்துக் கொள்வதை உணர்கிறேன், செஸ் ஆட்டத்தில் மையக் காயாக இருப்பதே முக்கியமானது. இதுதான் என்னை நல்ல நிலையில் வைத்துள்ளது. அடி வாங்குவது பற்றி எனக்கு எந்த கவலையும் இருந்ததில்லை. விக்கெட்டுக்கு வீச வேண்டும் இல்லையேல் சிக்ஸ் அடிக்கட்டும் என்ற தைரியமான மன நிலையே என் சாதகம்.

6 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வாறு வளர்ச்சி கண்டுள்ளீர்கள்?

நான் பெரிய அளவில் டெஸ்ட் கிரிக்கெட் வீரனாக வளர்ந்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட சூழலில் நான் என்னை ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த ஒருவனாகக் காண்பதில்லை. மென்மேலும் வளர்ச்சியடையும் ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே என்னை பார்க்கிறேன். ஒரு மனிதனாகவும் வளர்ந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அதாவது திறமை, ஆட்டம், மக்கள் ஒருவரையொருவர் எப்படி பார்க்கின்றனர், வேறொருவரின் எதிர்பார்ப்புக்கு இணங்க இருப்பது எப்படி என்று வெற்றி பெறுவதற்கான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.

இந்த விளையாட்டில் நான் ஒரு பவுலராக அடியெடுத்து வைத்ததற்க்கான, விஷயங்களை வித்தியாசமாக அணுகுவதற்கான காரணம் மக்கள் பார்வையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவே. ஏனெனில் எந்த ஒரு தனிச்சிறப்பாகத் திகழும் அணியும் பந்து வீச்சு பலத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது, வலுவான பவுலிங் கலாச்சாரத்தில்தான் இருந்து வந்துள்ளது.

49 டெஸ்ட் போட்டிகளில் 275 விக்கெட்டுகள்... உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா?

பேட்ஸ்மெனை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறேன் என்பதில்தான் என் திருப்தி அடங்கியுள்ளது. எவ்வளவு தூரம் அவர்களை இறுக்கமாக என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என்பதில்தான் உள்ளது. நான் எப்போதுமே கத்தி முனையிலேயே நிற்கிறேன். கத்தி முனையில் நிற்கவே விரும்புகிறேன். எண்ணிக்கைகளை நான் அறிவேன், காரணம் நான் நன்றாகத் தயார்படுத்திக் கொள்பவனாகவே இருக்கிறேன். இதனால் நான் எண்ணிக்கை சாதனைக்கானவன் என்றல்ல பொருள். இப்படியிருந்தால் ஆட்டத்தின் மீதான நேயத்தை எங்கோ இழந்து விடுகிறேன் என்று நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகள் இருந்ததை விட இப்போது கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட் ஆடத் தொடங்கியது முதல் நீங்கள் தனித்துவமாகத் திகழ்கிறீர்கள்...

என் மீது விமர்சனங்கள் இருந்தாலும் நான் நல்ல நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன். அடுத்த 49 டெஸ்ட் போட்டிகளிலும் இதே போன்று நான் செயல்பட வேண்டும் என்று யாராவது கூறினால் அது நியாயமானதே. ஆனால் நான் இதை விடவும் சிறப்பாக கூட செயல்படலாம். யாருக்கும் தெரியாது, ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் விரைவில் உங்களை சோர்வுக்குட்படுத்தி விடும். இது தழும்புகளை ஏற்படுத்தி குறிப்பிட்ட ஆட்டத்தில் நீங்கள் செயல்படும் விதத்தை மாற்றி விடும்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு இன்னும் சில புதிய பந்துகளை வீசி பரிசோதனை முயற்சி செய்வேன் என்றீர்கள்...?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒன்றிரண்டு லெக் ஸ்பின் பந்துகளை முயற்சி செய்தேன். தொடரில் நான் என்னை வித்தியாசப்படுத்திக் காட்ட விரும்பினேன். ஆனால் திடீரெனப் பார்த்தால் நான் விளையாடவில்லை. ஏனெனில் அணிச்சேர்க்கை 4 வேகம் ஒரு ஸ்பின் என்பதாக இருந்தது. இது எனக்குக் கடினமாக இருந்தது., ஏனெனில் நான் புதிய விஷயங்களை முயற்சிக்கிறேன், புரட்சிகரமாக, இரண்டு ஸ்பின் பந்து வீச்சையும் வீச முயற்சி செய்தேன், ஏனெனில் ஒருவரும் இருதரப்பு ஸ்பின்னையும் வீசியதில்லை. இத்தகைய முயற்சிகளுக்கு தொடர்ச்சியான வாய்ப்பு முக்கியம். அதாவது அப்போதுதான் நான் என்னை நிலை நிறுத்திக் கொண்டு எப்போது வீச வேண்டும் என்று முடிவெடுக்க முடியும். ஒரு சில தவறுகளையும் செய்வேன்.

ஆனால் திடீரென என் வாழ்க்கையில் ஒரு உயர் அழுத்த போட்டியில் நேரடியாக இறங்க வேண்டியதாயிற்று. இலங்கைக்கு எதிராக நாம் தோற்றோம், அந்த அணிக்கு எதிராக இத்தகைய புதிய முயற்சிய இருமுறை மேற்கொண்டேன். பிறகு பாகிஸ்தான். அன்று அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். அன்று 10 ரன்கள் குறைவாக கொடுக்க விரும்பினேன்.

அனில் கும்ப்ளே... ரவி சாஸ்திரி மாற்றங்கள்...

நான் இப்படித்தான் அதைப் பார்க்கிறேன். சூழ்நிலை 3 பேருக்குமானது. கேப்டன், கோச், நிர்வாகம். கண்டிப்பாக யார் உள்ளே வர வேண்டும், யார் வெளியே போக வேண்டும் என்பதை தலைமையே தீர்மானிக்கிறது. விராட் கூறியது போல் எங்களிடம் கேட்டாலே தவிர நாங்கள் இந்த விவகாரத்தில் கருத்து கூற முடியாது. நான் இதில் எந்த இடத்திலும் இல்லவே இல்லை. இது என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத விவகாரம்.

எனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை, நான் தந்திரமாகப் பேசுகிறேன் என்று நினைக்காவிட்டால் ஒன்றைக் கூற முடியும் அனில், ரவிசாஸ்திரி ஆகியோருக்கு வேறுபட்ட பலங்கள். ரவிசாஸ்திரி எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார். அவர் உற்சாகமாக இருப்பவர், அணியில் நிறைய ஆற்றல்களை உட்செலுத்துபவர். அனில் கட்டுக்கோப்பானவர், முறைமை சார்ந்து இயங்குபவர், ஒரு பவுலருக்கான நிறைய பரிமாணங்களை உருவாக்கக்கூடியவர். அனில் கும்ப்ளேவுடன் உரையாடுவதில் எனக்கு மிகவும் விருப்பமானது, ஏனெனில் இருவருமே ஒரேமாதிரியான திறமையுடையவர்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த உற்சாகமான கிரிக்கெட் பயணத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் எந்த ஒன்றும், ஒருவரும் நிலையானதோ, நிலையானவரோ அல்ல, அனைத்தும் மாறக்கூடியதே. நாமும் இதனுடன் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x