ராம்குமார் முன்னேற்றம்

ராம்குமார் முன்னேற்றம்
Updated on
1 min read

உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் சென்னையை சேர்ந்த ராம்குமார் ராமநாதன், ஒற்றையர் பிரிவில் 168-வது இடத்தை பிடித்துள்ளார்.

டென்னிஸ் வாழ்க்கையில் அவரது சிறந்த ரேங்கிங் இதுவாகும். அமெரிக்காவின் வின்னேக்டா நகரில் நடைபெற்ற போட்டியில் இறுதி சுற்று வரை முன்னேறியதன் மூலம், 22 வயதான ராம்குமார் 48 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் 16 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். மற்ற இந்திய வீரர்களான யூகி பாம்ப்ரி (212), குணேஷ்வரன் (214), ஸ்ரீராம் பாலாஜி (293), சுமித் நஹல் (306) ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.

இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஒரு இடம் பின்தங்கி 22-வது இடத்தை பிடித்துள்ளார். திவிஜ் சரண் 51-வது இடத்தையும், புரவ் ராஜா 52-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மூத்த வீரரான லியாண்டர் பயஸ் 3 இடங்கள் முன்னேறி 59-வது உள்ளார். ஜீவன் நெடுஞ்செழியன் 8 இடங்கள் பின்தங்கி 98-வது இடத்தை பிடித்துள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா 7-வது இடத்தில் நீடிக்கிறார். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in