

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.
ஆண்கள் பிரிவில் இன்று நடக்க வுள்ள முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்த்து ஆடுகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா, ரஷ்யாவின் டானில் மெட்வடேவை எதிர்த்து களம் இறங்குகிறார். ரபேல் நடால், நிக் கிர்கியோஸ் நிஷிகோரி ஆகியோரும் இன்று நடக்கும் முதல் சுற்று போட்டிகளில் ஆடவுள்ளனர்.
மகளிர் பிரிவில் இன்று நடக்கும் முதல் சுற்று போட்டியில், அமெரிக் காவின் வீனஸ் வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் எலிஸ் மெர் டென்ஸை எதிர்த்து ஆடவுள்ளார். மற்றொரு போட்டியில் ரொமேனி யாவின் சிமோனா ஹாலெப், நியூஸிலாந்தின் மரினா எராகோ விக்கை எதிர்த்து ஆடுகிறார். பெட்ரா விட்டோவா, ஜெலீனா ஓஸ்ட பென்கோ ஆகியோரும் இன்று நடக்கவுள்ள முதல் சுற்று போட்டி களில் ஆடவுள்ளனர்.