

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் குருணால் பாண்டியா, ஐபிஎல்-ல் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் பேசில் தம்பி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 26-ம் தேதி தொடங்கும் இந்த ஏ தொடரில் ஆஸ்திரேலியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ, இந்தியா ஏ அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரும், இந்தியா ஏ தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையே 2 நான்கு நாள் முதல்தரப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இதற்கான இந்தியா ஏ அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முத்தரப்பு ஒருநாள் தொடர் அணிக்கு மணீஷ் பாண்டே கேப்டனாக இருப்பார், 4 நாள் போட்டிகளுக்கு கருண் நாயர் கேப்டனாக இருப்பார். இரு அணிகளிலும் ஸ்ரேயஸ் ஐயர் இருக்கிறார்.
ஒருநாள் அணியில் ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா, குஜராத் லயன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பேசில் தம்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் முத்தரப்பு தொடருக்கான இந்தியா ஏ அணி:
மணிஷ் பாண்டே (கேப்டன்), மந்தீப் சிங், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, கருண் நாயர், குருணால் பாண்டியா, ரிஷப் பந்த் (விகீ), விஜய் சங்கர், அக்சர் படேல், யஜுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், பேசில் தம்பி, மொகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், சித்தார்த் கவுல்.
4 நாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி:
கருண் நாயர் (கேப்டன்), பிரியங்க் பஞ்சல், அபினவ் முகுந்த், ஸ்ரேயஸ் ஐயர், அங்கிட் பானி, சுதிப் சாட்டர்ஜி, இஷான் கிஷம் (வி.கீ), ஹனுமா விஹாரி, ஜெயந்த் யாதவ், ஷாபாஸ் நதிம், நவ்தீப் சைனி, மொகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், அன்கிட் சவுத்ரி, அன்கிட் ராஜ்புத்.