

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அட்டவணை மும்பை யில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நைஜீரியா வீரர் எஸ்டேபான் காம்பியஸோ, அர்ஜென்டினாவின் என்வான்க்வோ கனு, இந்தியாவின் சுனில் சேத்ரி மற்றும் பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
17 வயதுக்கு உட்பட்டோருக் கான உலகக் கோப்பை கால்பந்து வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு மும்பையில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். FIFA.com என்ற இணையத் தளத்தில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நைஜீரியா வீரர் எஸ்டேபான் காம்பியஸோ, அர்ஜென்டினாவின் என் வான்க்வோ கனு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். காம்பியஸோ 1993-ம் ஆண்டு நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற அணியிலும், என்வான்க்வோ கனு 1995-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தனர்.