கள நடுவர்கள் 3-வது நடுவருடன் பேசுவதை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி

கள நடுவர்கள் 3-வது நடுவருடன் பேசுவதை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி
Updated on
1 min read

கிரிக்கெட் போட்டியின் போது கள நடுவர்கள், 3-வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் போது நடக்கும் உரையாடலை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரின் போது, களநடுவர்கள், டிவி நடுவரிடம் தீர்ப்புகளை முறையிடும் போது நடக்கும் உரையாடலை ரசிகர்களும் கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி இந்த பரிசோதனைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

டி.ஆர்.எஸ். முறையில் அவுட் தீர்மானம், ஆலோசனைகள் மற்றும் வீரர்கள் 3ஆம் நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் தருணங்களை இந்தத் தொடரில் ரசிகர்களும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடுவர் தீர்ப்புகளை பார்வையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தொடர் முயற்சியினால் இந்த பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது வெற்றி அடைந்தால், உலகக் கோப்பயின் சில ஆட்டங்களிலும் இத்தகைய முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

களநடுவர்களுக்கும் டிவி நடுவருக்கும் ஒரு தீர்ப்பு குறித்த விவகாரத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ள ரசிகர்கள் இந்த புதிய முயற்சியை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in