

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டெர்பியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறும்.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தையும், அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியையும், கடைசியாக பாகிஸ்தான் அணியை 95 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றிருந்தது.
3 வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளுடன் பட்டியலில் இந்திய அணி முதலிடம் வகிக் கிறது. தொடர்ச்சியான வெற்றி களின் மூலம் அணியின் தன்னம் பிக்கை அதிகரித்துள்ள நிலையில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. முதல் இரு ஆட்டங்களிலும் பேட்டிங்கில் இந்திய வீராங் கனைகள் பிரமாதமாக செயல்பட்டனர்.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் சுணக்கம் ஏற்பட்ட போதிலும் பந்து வீச்சில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. சுழல் ராணியாக உருவெடுத்துள்ள ஏக்தா பிஷ்ட், பாகிஸ்தானுக்கு எதிராக 10 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வேட்டையாடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இவரது சிறப்பான பந்து வீச்சால் 169 ரன்கள் என்ற குறைந்த இலக்கை கொடுத்த போதிலும் பாகிஸ்தான் அணியை 38.1 ஓவர்களில் 74 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது. மற்றொரு சுழற்பந்து வீச்சு வீராங்கனையான தீப்தி சர்மா, மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பீல்டிங்கிலும் அவர் அசத்துவது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
பூனம் யாதவ், ஹர்மான்பிரித் கவுர் ஆகியோரும் பந்து வீச்சில் உறுதுணையாக இருந்து வரு கின்றனர். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள வேகப் பந்து வீச்சு வீராங்கனையான ஜுலன் கோஸ்வாமி இந்த தொடரில் இதுவரை சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை.
இதனால் அவர் கூடுதல் முயற்சி செய்யக்கூடும். பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ், பூனம் ராவத் ஆகியோர் அதிரடி வீராங்கனைகளாக உள்ளனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.
இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியிடமும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும், கடைசி ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி யிடமும் தோல்வி கண்டிருந்தது.
இலங்கை அணி பேட்டிங்கில் ஷாமரி அதப்பட்டுவையே பெரிதும் சார்ந்திருக்கிறது. நியூஸிலாந்துக்கு எதிராக 53 ரன்கள் சேர்த்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் ஷாமரி அதப்பட்டு, இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடித் தரக்கூடும்.