

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதற்கு முந்தைய வலைப்பயிற்சியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவுக்கு வீசிய யார்க்கர் அவருக்கு காய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
17 வயதான, இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் ஜானி பேர்ஸ்டோ எதிர்கொண்ட முதல் பந்தையே காலைப் பதம் பார்க்கும் துல்லிய யார்க்கராக வீச வலியாலும் காய அச்சுறுத்தல் காரணமாகவும் பேர்ஸ்டோ ஒரு பந்துடன் பெவிலியன் திரும்பினார்.
ஆனால் உடனடியாக முதலுதவி பெற்ற பேர்ஸ்டோ முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார், ஆனால் 10 ரன்களில் அவர் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக வீசவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணி பயிற்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் கால்காப்புடன் பேட்டிங்குக்கு தயாராக இருந்ததும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் அருகே செயிண்ட் ஜான் வுட்டில் சச்சினுக்கு வீடு உள்ளது, இங்கு விடுமுறையை கழிப்பது வழக்கம்.
விடுமுறையின் போது அர்ஜுன் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் பலருக்கும் பந்து வீசி வருவது வழக்கம்.