Published : 09 Jul 2017 09:58 AM
Last Updated : 09 Jul 2017 09:58 AM

4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்தது ஜிம்பாப்வே

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸில் வென்ற இலங்கை அணியின் கேப் டன் மேத்யூஸ் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். கடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்த டிக்வெல் லாவும், குணதிலகாவும் இப் போட்டியிலும் சிறப்பான ஆட் டத்தைத் தொடர்ந்தனர். ஆரம் பத்தில் இருந்தே அடித்து ஆடிய அவர்கள் விக்கெட்டை பறிகொடுக் காமல் ஆடி ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். 16.1 ஓவரில் 100 ரன்களைக் கடந்த இந்த ஜோடி, விக்கெட் இழப்பின்றி 33.4 ஓவர் களில் 200 ரன்களைக் கடந்தது. டிக்வெல்லா 99 பந்துகளில் சதம் விளாசினார்.

ஜிம்பாப்வே அணிக்கு கடும் சவாலாக விளங்கிய இந்த ஜோடி 209 ரன்களில் பிரிந்தது. 101 பந்துகளில் 87 ரன்களைச் சேர்த்த குணதிலகா, வாலெரின் பந்தில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த சிறிது நேரத்தி லேயே டிக்வெல்லாவும் அவுட் ஆனார். 118 பந்துகளில் 8 பவுண் டரிகளுடன் டிக்வெல்லா 116 ரன்களைச் சேர்த்தார். இதைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் வேகமாக ரன்களைக் குவிக்கும் முயற்சியில் இலங்கை வீரர்கள் ஈடுபட்டனர். மேத்யூஸ் 42, உபுல் தரங்கா 22 ரன்களை அடிக்க, இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணியில் வாலெர், மாபு ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

வெற்றிபெற 301 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம் பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் அந்த அணி 7.4 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது. ஜிம்பாப்வே அணியின் ஸ்கோர் 67 ரன்களாக இருந்தபோது மசகட்சா அவுட் ஆனார். 36 பந்து களில் 28 ரன்களைச் சேர்த்த அவரது விக்கெட்டை வனிது ஹசரங்கா கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து சாலமன் மைர் 43, முசகண்டா 30 ரன்களைச் சேர்த்து அவுட் ஆனார்கள். ஜிம் பாப்வே அணி 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் தடைப்பட்டதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணி வெற்றிபெற 31 ஓவர்களில் 219 ரன்களை எடுக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்தும் முயற்சியில் வில்லியம்ஸ் 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து சிக்கந்தர் ராசா 10 ரன்களில் அவுட் ஆனார். இருப்பினும் கிரேக் இர்வின் பவுண்டரிகளும், சிக்சரு மாக விளாசி இலங்கை அணிக்கு பயம் காட்டினார். அவரை வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்கள் பெரிதும் முயன்றனர்.

45 பந்துகளில் 50 ரன்களைக் கடந்த இர்வின், 55 பந்துகளில் 69 ரன்களைக் குவித்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார். அவரது சிறப்பான பேட்டிங்கால் ஜிம்பாப்வே அணி 29.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x