

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தங்களது 5-வது லீக் ஆட்டத்தில் இன்று தென் ஆப்ரிக்க அணியை எதிர்த்து களம் இறங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தென் ஆப்ரிக்க அணி, இங்கிலாந்திடம் பெற்ற தோல்விக்கு பிறகு இன்று இந்தியாவை சந்திக்கிறது. அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டு மானால் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.