உலகின் சிறந்த பினிஷர் தோனிக்கு அருமையாக வீசினார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்: பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பாராட்டு

உலகின் சிறந்த பினிஷர் தோனிக்கு அருமையாக வீசினார்  கெஸ்ரிக் வில்லியம்ஸ்: பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பாராட்டு
Updated on
1 min read

4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சற்றும் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்ததையடுத்து முக்கியமான தருணத்தில் தோனியின் விக்கெட்டைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்சை மே.இ.தீவுகள் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பாராட்டியுள்ளார்.

ஸ்டூவர்ட் லா கூறியதாவது:

அன்று தன் முதல் போட்டியில் ஆடிய கெஸ்ரிக் வில்லியம்ஸ் 60 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்தார், ஆனால் இந்தப் போட்டியில் உலகின் தலைசிறந்த பினிஷர் தோனிக்கு 5 ஓவர்களை வீசி குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார். இது மிகப்பெரிய முயற்சியாகும்.

அவரிடம் சில தந்திரங்கள் உள்ளன, அது மிகவும் கடினமானது. இவர் டி20 கிரிக்கெட்டில் எங்களது முன்னணி பவுலர், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் (12). ஒருநாள் போட்டிகளுக்கு இவரை அணியில் சேர்த்தது நல்லதாக அமைந்தது. நடு மற்றும் இறுதி ஓவர்களில் இவர் அணிக்குத் தேவையானதைச் செய்கிறார்.

ஒரு விக்கெட்டைத்தான் கைப்பற்றினார் என்றாலும் அது மிக முக்கியமான விக்கெட்டாகும். 29 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

இது தனித்துவமான ஒரு முயற்சி, பீல்டிங்கில் அவர் ஒரு நெருப்பு, ஓய்வறையிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் 300 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தினோம், தற்போது இந்தியாவுக்கு எதிராக குறைந்த இலக்கில் வெற்றி பெற்றுள்ளோம். உலகின் இரண்டு சிறந்த அணிகளை வீழ்த்தியுள்ளோம். எங்கு சென்று அடைய வேண்டும் என்ற ஏணியில் ஒரு படி முன்னேறியுள்ளோம்.

இவ்வாறு கூறினார் ஸ்டூவர்ட் லா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in