

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பி.அருண், தமிழ்நாடு பிரீமியர் லீக் ஊடக மேலாளர் ஆர்.என்.பாபா ஆகி யோர் திருநெல்வேலியில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 2-வது சீஸனில் 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூலை 22-ம் தேதி முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி தொடங்குகிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி இறுதி போட்டி நடைபெறும்.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.1 கோடி பரிசும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும், 3, 4-வது இடம்பெறும் அணிகளுக்கு ரூ.40 லட்சமும், 5 முதல் 8-வது இடம் பெறும் அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
கடந்த சீசனில் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. இதனால் இந்த ஆண்டு கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலத்தில் குடும்ப விழாவாக கொண்டாடுவதற்கு ‘ரசிகர்கள் பூங்கா’ எனும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர் பூங்காவில் கிரிக்கெட் போட்டிகளை பிரம்மாண்ட திரையில் நேரலையாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. வார விடுமுறையில் குடும்பத்துடனும், நண்பர்களுட னும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க உணவு, இசை என கோலா கலத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
கோவையில் ஜூலை 22-ம் தேதி, திருச்சியில் 30-ம் தேதி, மதுரையில் ஆகஸ்ட் 6-ம் தேதி, சேலத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி, மதுரையில் ஜூலை 16-ம் தேதி, சென்னையில் ஜூலை 21-ம் தேதிகளில் ரசிகர் பூங்காவில் கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.