

தென் கொரியாவில் உள்ள ஜேஜூ தீவில், மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் நவம்பர் 25ம் தேதி வரை நடக்கிறது.
ராய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் முதலிடம் பிடித்த வீராங்கனைகள் உள்ளிட்ட 10 பேர் உலக குத்துச்சண்டைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம்: சர்ஜூபாலா தேவி (48 கிலோ எடைப் பிரிவு), பிங்கி ராணி (51 கிலோ), மீனா குமாரி தேவி (54 கிலோ), பாசுமதாரி (57 கிலோ), பிரியங்கா சவுத்ரி (60 கிலோ), பவித்ரா (64 கிலோ), நீது (69 கிலோ), மோனிகா சான் (75 கிலோ), சவீட்டி (81 கிலோ), கவிதா சஹால் (81 + கிலோ).
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற மேரி கோம், சரிதா தேவி, பூஜா ராணி ஆகியோர் பல்வேறு காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை.