Last Updated : 20 Jun, 2015 09:50 AM

 

Published : 20 Jun 2015 09:50 AM
Last Updated : 20 Jun 2015 09:50 AM

உலக ஹாக்கி லீக்: இந்தியா- பிரான்ஸ் இன்று மோதல்

உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் இன்று தொடங்குகின்றன. 1920 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு அன்ட்வெர்ப் நகரில் நடைபெறும் பெரிய போட்டி இதுதான்.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பிரான்ஸும் மோதுகின்றன. ஏற்கெனவே 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட இந்திய அணி, இந்தப் போட்டியில் எவ்வித நெருக்கடியுமின்றி களமிறங்குகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. 23-ம் தேதி போலந்தையும், 26-ம் தேதி பாகிஸ்தானையும், 28-ம் தேதி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது இந்தியா.

இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், போலந்து, பிரான்ஸ் ஆகிய அணிகளும், பி பிரிவில் கிரேட் பிரிட்டன், பெல்ஜியம், மலேசியா, அயர்லாந்து, சீனா ஆகிய அணிகளும் இடம்பெற் றுள்ளன.

மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், பெல்ஜியமும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் முதலிடத் தைப் பிடித்து ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது இந்திய மகளிர் அணி. 23-ம் தேதி நியூஸி லாந்தையும், 24-ம் தேதி போலந் தையும், 27-ம் தேதி ஆஸ்திரேலி யாவையும் சந்திக்கிறது இந்திய மகளிர் அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x