Last Updated : 27 Sep, 2016 10:32 AM

 

Published : 27 Sep 2016 10:32 AM
Last Updated : 27 Sep 2016 10:32 AM

டேபிள் டென்னிஸ்: சத்யன் பட்டம் வென்றார்

பெல்ஜியத்தில் உள்ள டீ ஹான் நகரில் பெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன், பெல் ஜியம் வீரர் நய்டிங் செட்ரிக்கை எதிர்த்து ஆடினார். இப்போட் டியில் 15-13, 11-6, 11-2, 17-15 என்ற செட்கணக்கில் சத்யன் வெற்றி பெற்றார். ’

இதன்மூலம் சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக 2012-ம் ஆண்டு இந்தியாவின் அசந்தா சரத் கமல் சர்வதேச டேபிள் டென் னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x