

ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் காயம் காரணமாக ரோஜர் ஃபெடரர் விலகியதால்,செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோத இருந்தார்கள். ஆனால், காயம் காரணமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்த இறுதிச் சுற்றிலிருந்து விலகினார் ஃபெடரர்.
இதனால் ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் சாம்பியன் ஆனார் ஜோகோவிச். ‘‘இந்தப் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் கலந்துகொள்ள மிகவும் முயற்சி செய்தேன். ஆனால் போட்டிக்குத் தேவையான உடல்தகுதியை அடையவில்லை. என்னுடைய வயதில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.” என்றார் ஃபெடரர்.
தொடர்ந்து மூன்று முறை இந்தப் போட்டியை வென்றுள்ளார் ஜோகோவிச். இதனால், ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸில் இவான் லென்டிலுக்குப் (1985-87) பிறகு தொடர்ச்சியாக 3 முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.