சந்தர்பாலும் மகன் தேஜ்நரைனும் ஒரே முதல் தரப் போட்டியில் அரைசதம்

சந்தர்பாலும் மகன் தேஜ்நரைனும் ஒரே முதல் தரப் போட்டியில் அரைசதம்
Updated on
1 min read

முன்னாள் மே.இ.தீவுகள் அணியின் சுவர் ஷிவ்நரைன் சந்தர்பாலும் அவரது மகன் தேஜ் நரைனும் ஒரே முதல்தரப்போட்டியில் அரைசதமடித்தனர்.

கரீபியன் மண்டல உள்நாட்டு கிரிக்கெட்டில் கயானா அணிக்கு தந்தையும் மகனும் விளையாடி முதல் முறையாக தந்தையும் மகனும் ஒரே போட்டியில் அரைசதம் அடித்த சாதனையை நிகழ்த்தினர்.

ஜமைக்காவுக்கு எதிரான போட்டியில் தந்தையும் மகனும் இணைந்து 38 ரன்கள் கூட்டணி அமைத்தனர். மகன் தேஜ்நரைன் 135 பந்துகளில் 58 ரன்கள் எடுக்க 5-ம் நிலையில் இறங்கிய தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் 175 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ஆனால் இருவரும் சதம் எடுக்க முடியாமல் போனது.

சந்தர்பால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 164 டெஸ்ட் போட்டிகளில் 11,867 ரன்களை 51.37 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 30 சதங்கல் 66 அரைசதங்கள்.

சந்தர்பாலின் மகன் தேஜ்நரைன் 2013-ல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தப் போட்டியையும் சேர்த்து 5 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளார்.

சந்தர்பால் 1994-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி 2 ஆண்டுகள் கழித்து தேஜ்நரைன் பிறந்தார். 42 வயதாகும் சந்தர்பால் கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்தார். இவருக்கு நியாயமான ஒரு பிரியாவிடை மரியாதையை மே.இ.தீவுகள் வாரியம் செய்யவில்லை.

இந்நிலையில் பைல் மூலம் கார்டு எடுக்கும் அதே முறையைப் பின்பற்றி அவரது மகன் தேஜ்நாராயண் களம் புகுந்துள்ளார். தந்தையைப் போலவே இவரும் இடது கை வீரர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in