Published : 29 Jan 2014 12:03 PM
Last Updated : 29 Jan 2014 12:03 PM

தென் கொரிய பாட்மிண்டன் வீரர் லீ யாங்கிற்கு ஓர் ஆண்டு தடை

ஊக்கமருந்து சோதனையில் பங்கேற்காமல் தவிர்த்ததற்காக தென் கொரிய வீரர்கள் லீ யாங் டே, கிம் கி-ஜங் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

லீ யாங் 2008 ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும், 2012 ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய தடைக்காலம் கடந்த 23-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி நள்ளிரவு வரையிலான நாள்கள் ஆகும். இந்தக் காலத்தில் அவர்கள் இருவரும் எந்தவித போட்டியிலும் பங்கேற்க முடியாது என சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட வீரர்கள் இருவரும் பிப்ரவரி 17-ம் தேதிக்குள் சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தில் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். சம்பந்தப்பட்ட வீரர்களின் செயல்பாடுகள் குறித்து சர்வதேச சம்மேளனத்துக்கு தெரிவிக்கத் தவறியதால் கொரிய பாட்மிண்டன் சங்கத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இந்தத் தண்டனை அதிகமானது, நியாயமற்றது எனக்கூறியுள்ள கொரிய பாட்மிண்டன் சங்கம், ஊக்கமருந்து தடுப்பு ஆய்வாளர்கள் சோதனை செய்வதற்காக வந்தபோது சம்பந்தப்பட்ட இரு வீரர்களும் போட்டியில் பங்கேற்றிருந்தனர். அதனால்தான் அவர்களால் ஊக்கமருந்து சோதனைக்கு வரமுடியாமல் போனது. அவர்கள் இருவரும் எந்தவித ஊக்கமருந்தையும் எடுக்கவில்லை. அதேபோன்று ஊக்கமருந்து சோதனைக்கும் மறுக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x