Published : 16 Nov 2014 11:17 AM
Last Updated : 16 Nov 2014 11:17 AM

உலக செஸ் போட்டி: ஆனந்த் அதிர்ச்சி தோல்வி

உலக செஸ் போட்டியின் 6-வது சுற்றில் ஆனந்தை வீழ்த்தினார் கார்ல்சன். இந்த ஆட்டத்தில் கிடைத்த நல்ல வாய்ப்பை கோட்டைவிட்ட ஆனந்த், இறுதியில் தோல்வியடைந்தார்.

ரஷ்யாவின் சூச்சி நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 5-வது சுற்றின் முடிவில் இருவரும் தலா 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 6-வது மற்றும் 7-வது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுவதால், அதைப் பயன்படுத்தி முன்னிலை வகிக்கும் திட்டத்துடன் நேற்று ஆடினார் கார்ல்சன். e4-c5 என்று தொடங்கியது முதல் நகர்த்தல்.

9-வது நகர்த்தலிலேயே இருவரும் ராணிகளை வெட்டிக் கொண்டார்கள். 20-வது நகர்த்தலின் போது மேட்ச் டிரா ஆகும் அல்லது கார்ல்சன் ஜெயிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், 26-வது நகர்த்தலில் Kd2 என்று நகர்த்தி, நம்பமுடியாத ஒரு தவறைச் செய்தார் கார்ல்சன். இதை ஆனந்த் பயன்படுத்திக்கொள்வார் என்று ஆவலுடன் பார்த்தால், அவசரமாக a4 ஆடி (Ne5 நகர்த்துவதற்குப் பதிலாக) வெற்றி பெறுவதற்கான அற்புதமான சந்தர்ப்பத்தை இழந்தார். அப்போது “ஆனந்த் இன்று தூங்கமாட்டார்” என்று ட்வீட் செய்தார்

கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருணா. கார்ல்சனும் பெரிய தவறு செய்து நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார் என்று நிரூபிக்கப்பட்ட தருணம் அது. தன் செயலுக்காக ஆனந்த் மிகவும் சங்கடப்பட்டது, நேரலை வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது. தனக்கு கிடைத்த அதிர்ஷ் டத்தைப் பயன்படுத்திக் கொண்ட கார்ல்சன், 38-வது நகர்த்தலில் ஆனந்தை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x