

சூப்பர் மிடில்வெயிட் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் சிங்குடன் மோத சீன வீரரான ஜுல்பிகர் மைமைடியாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர் விஜேந்தர் சிங்குக்கும், சீன வீரர் ஜுல்பிகர் மைமைடியாலிக்கும் இடையிலான சூப்பர் மிடில்வெயிட் குத்துச்சண்டை போட்டி, வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி மும்பையில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஜுல்பிகர் அறிவித்துள்ளார். இந்தப் போட்டியில் இருந்து விலகுவதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. விஜேந்தருடன் இப்போட்டியில் மோதாவிட்டாலும், இந்த ஆண்டு இறுதியில் தான் மோதவுள்ளதாக மட்டும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போட்டியில் இருந்து ஜுல்பிகர் விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக வேறு வீரர் இந்த குத்துச்சண்டைப் போட்டியில் விஜேந்தர் சிங்குடன் மோதுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய விஜேந்தர் சிங், “ஜுல்பிகர் என்னுடன் மோதாமல் இருப்பதற்கு தகுந்த காரணம் இருக்கும் என்று கருதுகிறேன். அவர் இல்லாத நிலையில் வேறு எந்த வீரருடனும் மோத தயாராகவே இருக்கிறேன். என்னுடன் யார் மோதினாலும் கடுமையாக போராடி அவர்களை வீழ்த்துவேன்” என்றார். -