Last Updated : 07 Jul, 2016 08:07 PM

 

Published : 07 Jul 2016 08:07 PM
Last Updated : 07 Jul 2016 08:07 PM

விம்பிள்டன்: காலிறுதியில் தோற்று சானியா-ஹிங்கிஸ் ஜோடி வெளியேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி மகளிர் இரட்டையர் காலிறுதிச் சுற்றில் சானியா மிர்சா-ஹிங்கிஸ் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.

5-ம் தரவரிசையில் உள்ள ஹங்கேரி-கஜஸ்தான் ஜோடியான டைமியா பாபோஸ்-யாரஸ்லவா ஷ்வெடோவா இணையிடம் சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வி தழுவி வெளியேறியது. இந்த ஆட்டம் 68 நிமிடங்களில் முடிந்து போனது.

இதன் மூலம் சானியாவுக்கு இந்த விம்பிள்டன் போட்டித் தொடர் சரியாக அமையாமல் போனது. முன்னதாக கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சானியா-இவான் டோடிக் ஜோடி 2-வது சுற்றிலேயே தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காலிறுதியில் முதல் செட்டின் 3-வது சர்வ் கேமை சானியா-ஹிங்கிஸ் ஜோடி இழக்க, மேலும் 7-வது கேமிலும் பிரேக் பாயிண்ட் அளித்து முதல் செட்டில் 2-6 என்று தோல்வி தழுவியது.

2-வது செட்டில் இரண்டு பிரேக் பாயிண்ட்களை பாபோஸ்-ஷ்வெடோவா ஜோடி எடுத்து சானியா-ஹிங்கிஸ் சர்வை முறியடிக்க 5-0 என்று முன்னிலை வகித்தனர். ஆனால் எதிரணியினரின் ஒரு சர்வ் கேமை முறியடித்து பிறகு தங்கள் சர்வை வென்று 4-5 என்று போராடிப் பார்த்தனர். ஆனால் 10-வது சர்வ் கேமில் பாபோஸ்-ஷ்வெடோவா ஜோடி வென்று இரண்டாவது செட்டை 6-4 என்று கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினர்.

சானியா-ஹிங்கிஸ் தங்களது முதல் சர்வ்களில் புள்ளிகளைப் பெற முடியவில்லை. மேலும் பல தவறுகளை தங்கள் ஆட்டத்தில் இழைத்ததால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x