

விஜய் மல்லையா தனது ஃபார்முலா 1 அணியான ஃபோர்ஸ் இந்தியா என்பதில் ‘இந்தியா’ என்பதை நீக்க பரிசீலித்து வருகிறார்.
ஜூன் 14-ம் தேதி தனது ஃபார்முல 1 அணியின் பெயரை மேலும் கவர்ச்சிகரமாகச் செய்து ஒரு சர்வதேச வாசனையை ஏற்றினால் பன்னாட்டு ஸ்பான்சர்களை ஈர்க்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறியதாக செய்திகள் வெளியாகின.
மோட்டர்ஸ்போர்ட் இணையதளத்திற்கு அவர் கூறும்போது, “தற்போதைய பெயரான ஃபோர்ஸ் இந்தியா என்பது உளவியல் ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட பெயராக இருப்பதாக பலரும் கூறினர். எனவே நானும் பிற பங்குதாரர்களும் முடிவெடுக்கவுள்ளோம், முக்கியமான முடிவு அதனால் அவசரப்படப் போவதில்லை, உரிய பரிசீலனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்” என்றார்.
பிரிட்டனில் இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கைச் சந்தித்து வருகிறார் விஜய் மல்லையா.
இந்திய வங்கிகளில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாத மோசடி புகாரில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கு இவர் மைதானத்துக்கு வந்த போது ‘திருடன்’ என்று சிலர் இவரை கேலி செய்தனர்.
அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மல்லையா, தொடர்ந்து இந்திய அணிக்காக என் ஆதரவை தெரிவிக்க போட்டிகளைப் பார்ப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.