Published : 05 Jan 2017 09:36 AM
Last Updated : 05 Jan 2017 09:36 AM

இறுதிப் போட்டியில் குஜராத் அணி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் ஜார்க்கண்ட் அணியை 123 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்களும், ஜார்க்கண்ட் 408 ரன்களும் எடுத்தன. 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய குஜராத் அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 81 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஜூனிஜா 81, காந்தி 51 ரன்கள் எடுத்தனர். 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் பேட் செய்தது. யார்க்கர் புகழ் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் ஜார்க்கண்ட் அணி ஆட்டம் கண்டது. பிரதியுஸ் சிங் 0, சுமித் குமார் 0, விராட் சிங் 17, கேப்டன் சவுரவ்ப் திவாரி 17, ஜக்கி 1, இஷான் கிஷன் 19, கவுசால் சிங் 24, நதீம் 1, சுக்லா 1, விகாஷ் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் 41 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஜார்க்கண்ட் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. குஜராத் அணி தரப்பில் பும்ரா 6, ஆர்.பி.சிங் 3, ஹர்திக் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி 83 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி யது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x