

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொட ரில் மோதுகின்றன. இந்த தொடருக் கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
முதல் டெஸ்ட் நவம்பர் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 17-ம் தேதி விசாகப் பட்டிணத்திலும், 3-வது டெஸ்ட் 26-ம் தேதி மொகாலியிலும் நடைபெறு கிறது. 4-வது டெஸ்ட் டிசம்பர் 8-ம் தேதி மும்பையிலும், கடைசி டெஸ்ட் 16-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடத்தப்படுகிறது.
ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் ஜனவரி 15-ம் தேதி புனேவிலும், 2-வது ஆட்டம் 19-ம் தேதி கட்டாக்கிலும், கடைசி ஆட்டம் 22-ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. டி 20 தொடரின் ஆட்டங்கள் 26, 29 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் நடக்கிறது. இந்த ஆட்டங்கள் முறையே கான்பூர், நாக்பூர், பெங்களூருவில் நடத்தப் படுகிறது.