4 நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா - ஏ அணிக்கு எதிராக இந்தியா - ஏ அணி திணறல்

4 நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா - ஏ அணிக்கு எதிராக இந்தியா - ஏ அணி திணறல்
Updated on
1 min read

ஆஸ்திரேலியா - ஏ அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்து திணறி வருகிறது.

இந்தியா - ஏ கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 4 அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா - ஏ அணி தற்போது ஆஸ்திரேலியா - ஏ அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆஸ்திரேலிய அணியின் ரிச்சர்ட்சன், பேர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்த இந்திய அணி 169 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் ஓரளவு சிறப்பாக ஆடி 112 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

66 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in