

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேயை ‘வாஷ் அவுட்’ ஆக்கியது வங்கதேசம்.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 503 ரன்களும், ஜிம்பாப்வே 374 ரன்களும் குவித்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
449 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே கடைசி நாளான நேற்று 85 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து வங்கதேம் 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.