

டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோ விச் முதல் சுற்றிலேயே தோல்வி யடைந்து வெளியேறினார்.
தரவரிசையில் 145-வது இடத் தில் உள்ள அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் போட்ரோ வுடன் மோதிய ஜோகோவிச் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் போராடி 6-7, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
கடந்த 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத் திலும் ஜோகோவிச்சை, மார்ட்டின் டெல்போட்ரோ தோற்கடித்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஆட்டங்களில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரபேல் நடால், டேவிட் பெரர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வெற்றி பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்கா வின் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டரியா காவ்ரிலோவாவை தோற்கடித் தார். மற்ற ஆட்டங்களில் ஸ்பெயி னின் கார்பைன் முகுருஜா, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், பிரான்சின் கரோலின் கார்சியா, செக்குடியரசின் பெட்ரா விட்டோவா, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
வில்லியம்ஸ் ஜோடி தோல்வி
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் லூசி சபரோவா, ஸ்டிரைகோவா ஜோடியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. ஒலிம்பிக் அரங்கில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வெற்றி பெற்ற அமெரிக்க ஜோடி முதன்முறை யாக தோல்வியை சந்தித்தது. நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய வில்லியம்ஸ் ஜோடி 3 முறை ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.