

இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) நிர்வாகிகள் தேர்தலில் குற்றப் பத்திரிகையில் பெயர் இடம்பெற்றவர்கள் போட்டியிட முடியாத வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் முழு திருப்தியளிக்கவில்லை.
நாங்கள் கூறியபடி முழுமையான திருத்தம் செய்யாதபட்சத்தில் ஐஓஏ மீதான தடையை நீக்க முடியாது என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) எச்சரித்துள்ளது.
நிர்வாகிகள் தேர்தலில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கடந்த டிசம்பரில் ஐஓஏவை சஸ்பெண்ட் செய்தது ஐஓசி. அதைத் தொடர்ந்து சஸ்பெண்டை நீக்குவதற்காக படிப்படியாக முயற்சி எடுக்கப்பட்டன. கடந்த 8-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஐஓஏ பொதுக்குழு கூட்டத்தின்போது குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.
ஆனால் அதில் ஐஓசி கூறியபடி ஐஓஏ நிர்வாகியாக உள்ள ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் இடம்பெறும்போது தானாகவே பதவி விலக வேண்டும் அல்லது சஸ்பெண்ட் செய்யப்படுவார் என திருத்தம் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்துள்ள ஐஓசி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.