

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக் கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெகார்தின் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் 113 ரன் களுக்கு அனைத்து விக்கெட்களை யும் இழந்தது. அதிகபட்சமாக ஹெய்னோ ஹூன் 29, பெகார்தின் 27 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சந்தகன் 4, உதனா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
114 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. கேப்டன் மேத்யூஸ் 50 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 54 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டிக்வெலா 22, சந்திமால் 22 ரன்கள் சேர்த்தனர்.
3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடைய செய்துள்ளது. கடைசி போட்டி கேப்டவுன் நகரில் நாளை நடைபெறுகிறது. இதற்கிடையே கடைசிப் போட்டியில் இருந்து மேத்யூஸ் விலகி உள்ளார்.
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தாயகம் திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி டி 20 ஆட்டத்தில் இலங்கை அணி சந்திமால் தலைமையில் களமிறங்க உள்ளது.