

சிட்னியில் நடைபெற்று வரும் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சானியா ஜோடி அரை இறுதியில் 6-1, 6-2 என் நேர் செட்டில் அமெரிக்காவின் வானியா கிங், கஜகஸ்தானின் யரோஸ்லவா ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 51 நிமிடங்களில் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் சானியா ஜோடியானது ஹங்கேரியின் டிமியா பபோஸ், ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென் கோவா ஜோடியை சந்திக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மார்ட்டினா ஹிங்கிஸை பிரிந்த சானியா அதன் பின்னர் கலந்து கொண்ட 8 தொடர்களில் தற்போது 6-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்கிறார்.