

75 வயதான பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே 3-வது திருமணம் செய்துள்ளார். தன்னுடன் 6 வருடங்கள் பழகிய தோழியான மார்சியா சிபிலே அயோகியை எளிய முறையில் மணம் முடித்தார் பீலே.
42 வயதான மார்சியா ஜப் பானை சேர்ந்த தொழில் அதிபர் ஆவார். இருவரும் முதன்முறை யாக கடந்த 1980-ம் ஆண்டு நியூ யார்க் நகரில் நேரில் சந்தித்துள் ளனர். அப்போது அவர்களுக்குள் அதிக பழக்கம் இல்லை.
2010-ல் சாவோ பாவ்லோ நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி யில் மீண்டும் இருவரும் சந்திக்க நேரிட்டது. அதன் பின்னர் இருவ ருக்கும் இடையிலான நட்பு பலமா னது. 2012-ம் ஆண்டில் பல்வேறு பொது நிகழ்ச்சியில் பீலே, மார் சியாவுடன் கலந்து கொண்டார்.
பீலே ஏற்கெனவே செய்து கொண்ட இரண்டு திருமணமும் முறிந்து போனது. ரோஸ்மேரி ஜோல்பி என்ற முதல் மனை விக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவதாக அஸ்ரியா என்பவரை திருமணம் செய்தார். அந்த வகையில் இரு குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பீலே தந்தை ஆவார்.
பிரேசில் அணிக்காக பீலே 91 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ளார்.
கால்பந்து வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் பங்கேற்று 1,281 கோல்களை பீலே அடித்துள்ளார். பிரேசிலின் சான்டோஸ், நியூயார்க் காஸ்மோஸ் ஆகிய கிளப்புகளுக்காகவும் அவர் விளையாடி உள்ளார்.