விளையாட்டு
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உஸ்பெகிஸ்தானை வென்றது இந்தியா
உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா ஓசியானா பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை சந்தித்தது. இதில் முதல் 2 ஒற்றையர் போட்டிகளிலும், இரட்டையர் ஆட்டங்களையும் வென்ற இந்திய அணி 3-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் மாற்று ஒற்றையர் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் இந்திய வீரரான ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் சஞ்சர் ஃபைசீவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ராம்குமார் ராமநாதன் 6 3, 6 2 என்ற செட்கணக்கில் வென்றார். இப்போட்டி 67 நிமிடங்களில் முடிந்தது. மற்றொரு போட்டியில் இந்திய வீரரான குணேஸ்வரன் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.
