

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.61 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்பள ஒப்பந்தபடி ஏற்கெனவே வீரர்களுக்கு ரூ.1.78 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுதவிர அணியில் உள்ள ஒவ்வொரு வீரர் களுக்கும் தலா ரூ.6 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் வாரியம் தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கோப் பையை வென்றதால் ஐசிசி-யின் பரிசுத் தொகையாக ரூ.14 கோடியை பாகிஸ்தான் அணி ஏற்கெனவே பெற்றுள்ளது என் பதும் குறிப்பிடத்தக்கது.