Published : 04 Jun 2017 11:16 am

Updated : 04 Jun 2017 11:16 am

 

Published : 04 Jun 2017 11:16 AM
Last Updated : 04 Jun 2017 11:16 AM

இந்திய அணிக்கே சாதகம்: ஷாகித் அப்ரிடி கருத்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐசிசி இணையத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு தீவிர பாகிஸ்தான் ஆதர வாளராக, எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும், குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது எங்களது அணி வெற்றியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் சமீபகால செயல்பாடுகள் மற்றும் இந்திய அணியின் ஆழத்தை பார்க்கும் போது, பாகிஸ்தான் அணியை விட அவர்களுக்கே வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது.

டாப் ஆர்டர் பேட்டிங்கில் கோலி யின் நம்பகத்தன்மை அனைவரும் அறிந்ததே. ஒருநாள் போட்டியில் அவர் மறக்க முடியாத சில இன்னிங்ஸ்களை விளையாடி உள்ளார். 2012-ம் ஆண்டு ஆசிய கோப்பையிலும், 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்திலும் எங்க ளுக்கு எதிராக அவர் சதம் விளாசி மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தார்.

என்னை பொறுத்தவரையில், கோலிக்கு பந்து வீசுவது எப்போதுமே சவாலானது தான். அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் உயர்ந்த அளவிலான திறனை வெளிப்படுத்த வேண்டும்.

பேட்டிங் இந்திய அணியின் பாரம்பரிய வலிமை ஆகும். பீல்டிங்கும் சிறப்பாக உள்ளது. சமபலம் கொண்ட தாக்குதல் பந்து வீச்சை வெளிப்படுத்தும் திறன் உள்ள வீரர்களும் அணியில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், சமீபகால போட்டிகளில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் வெற்றியாளராக இருந்துள்ளார்.

அவருக்கு உறுதுணையாக ரவீந்திர ஜடேஜா உள்ளார். இந்திய அணியின் வெற்றிகளில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலை சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காமல் இருக்கலாம். ஆனால் துல்லியமாக வீசக் கூடிய அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ரன் சேர்ப்பது கடினம்.

இளம் வீரான ஜஸ்பிரித் பும்ரா வின் வேகப்பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரது பந்துவீச்சை நான் ’பாகிஸ்தானி யார்க்கர்’ என்றே அழைப்பேன். 1990-ம் ஆண்டுகளில் எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் துல்லிய மாக யார்க்கர்கள் வீசும் திறனை கொண்டிருந்தனர். அதை பும்ராவின் பந்து வீச்சு நினைவுப்படுத்துகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சாம்பியன்ஸ் டிராபிஇந்தியா பாக் ஆட்டம்வெற்றி வாய்ப்புஷாகித் அப்ரிடி கருத்து

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author