Published : 06 Nov 2014 10:40 AM
Last Updated : 06 Nov 2014 10:40 AM

ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.

அடிலெய்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 14, கேமரூன் ஒயிட் 24, பென் டங்க் 2, ரியார்டன் 4 ரன்களுக்கு ஆட்ட மிழந்தனர்.

இதையடுத்து வாட்சனுடன் இணைந்தார் ஃபாக்னர். இந்த ஜோடி அதிரடியாக ஆட ஆஸ்தி ரேலியாவின் ஸ்கோர் உயர்ந்தது. வாட்சன் 47 ரன்களில் (36 பந்துகள்) ஆட்டமிழந்தார். ஃபாக்னர் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 41 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் டக் அவுட்டாக, டி காக்குடன் இணைந்தார் ரொசாவ். அதிரடியாக ஆடிய ரொசாவ் 32 பந்துகளில் அரைசத மடிக்க, 11.3 ஓவர்களில் 100 ரன் களை எட்டியது தென் ஆப்பிரிக்கா. ரொசாவ் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்து வெளியேற, டி காக் 46 ரன்கள் சேர்த்து வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா 19 ஓவர் களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டுமினி 6, மில்லர் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x