

தகவல் தொழில்நுட்ப கல்வி மையமான என்ஐஐடி-யின் பிராண்ட் அம்பாசிடராக விஸ்வநாதன் ஆனந்த் தொடர்வார் என்று அந்த மையத்தின் தலைவர் ராஜேந்திர எஸ்.பவார் கூறியுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனிடம், விஸ்வநாதன் தோல்வியடைந்தார். இதனால், பின்னடைவைச் சந்தித்துள்ள ஆனந்த்தை என்ஐஐடி நிறுவனம் தொடர்ந்து பிராண்ட் அம்பாசிடராக வைத்திருக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இது தொடர் பாக என்ஐஐடி தலைவர் ராஜேந்திர எஸ்.பவார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: உலக செஸ் வரலாற்றில் இந்தியாவுக்கு ஒரு நிரந்தரமான இடத்தையும், அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் ஆனந்த். இந்தியாவில் ஏராள மான இளைஞர்களுக்கு செஸ் மீது ஈர்ப்பு ஏற்பட ஆனந்த் முக்கியக் காரணமாக உள்ளார். அவர் உண்மையான செஸ் மேதை. நமது தேசத்தின் நாயகர்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.