Last Updated : 22 Nov, 2014 02:41 PM

 

Published : 22 Nov 2014 02:41 PM
Last Updated : 22 Nov 2014 02:41 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையை ரத்து செய்ய வேண்டாம்: இந்தியா சிமெண்ட்ஸ் மன்றாடல்

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் ஒப்பந்த்தத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் மன்றாடியுள்ளது.

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான முத்கல் கமிட்டியின் அறிக்கை மீதான எதிர்வினையில் இந்தியா சிமெண்ட்ஸ் கோரிக்கை வைக்கும் போது, “குருநாத் மெய்யப்பன் மீது கூறப்பட்ட விவகாரங்கள் தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதோ உரிமையாளர்கள் மீதோ, ஊழியர்கள் மீதோ எந்த வித அனுமானங்களும் இல்லை.” என்று கோரியுள்ளது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் என்ற ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அது ஐபிஎல் கிரிக்கெட்டிற்கே பாதிப்பு ஏற்படுத்தும். என்று இந்தியா சிமெண்ட்ஸ் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா சிமெண்ட்ஸ் கட்டிக்காத்து வந்த பாரம்பரியத்தை பிஹார் கிரிக்கெட் சங்கம் தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் முற்றிலும் இல்லாமல் அடிக்க முயற்சி செய்து வருகிறது.

அணி உரிமையாளர் ஒப்பந்தம் மற்றும் நடைமுறை விதிகள் ஆகியவற்றின் கீழ் இந்தியா சிமெண்ட்சிற்கு சில நடைமுறைகள் உள்ளன. ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்ற ஒப்பந்தத்தை ரத்து செய்தால், இது இந்தியா சிமெண்ட்ஸிற்கு மட்டும் பின்னடவைக் கொடுக்காது, ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், ஸ்பான்சர்கள் என்று அனைவரிடத்திலும் விளைவுகளைத் தோற்றுவிக்கும். என்று இந்த பதிலில் வேண்டப்பட்டுள்ளது.

முத்கல் கமிட்டி அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் ‘அணியின் அதிகாரி’ என்று வர்ணித்தது. ஆனால் இந்த பதில் மனுவில், "குருநாத் மெய்யப்பன் பங்குதாரரும் இல்லை, இயக்குநரும் இல்லை, ஊழியரும் இல்லை. அவர் சம்பளமோ வேறு எதுவோ சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பெறவில்லை” என்று கூறியுள்ளது.

மேலும் குருநாத் மெய்யப்பன் ‘அணியின் அதிகாரி’ என்பது முத்கல் அறிக்கையில் விரிவாக விவாதிக்கப்படவில்லை, அதாவது எந்த முடிவின் அடிப்படையில் குருநாத் அணியின் அதிகாரி என்று விசாரணை கமிட்டி தீர்மானித்தது என்பதை விவாதிக்கவில்லை, இந்தியா சிமெண்ட்ஸிற்கும் அறிவுறுத்தவில்லை. அத்தகைய தகவலை தருவது அவசியம் ஏனெனில் அதனை எதிர்த்து நாங்கள் முறையீடு செய்ய முடியும்.

“ஆகவே, குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி என்ற முன்முடிவின் பேரில் உரிமையாளர் ஒப்பந்தம் பிரிவு 11.3-இன் கீழ் மீறப்பட்டுள்ளது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரரால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தவறானது ஏனெனில் அந்தப் பிரிவின் கீழ் அணியின் உரிமையாளரின் செயல்களே கூறப்பட்டுள்ளன. என்று இந்தியா சிமெண்ட்ஸ் தனது மனுவில் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x