Published : 03 Aug 2016 05:39 PM
Last Updated : 03 Aug 2016 05:39 PM

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20: அணிகளும் வீரர்களும், கூடுதல் தகவல்களும்

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. தமிழகத்தில் 3 இடங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறும். 23 நாட்களுக்கு இந்தத் தொடர் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மத்தி வரை இந்த டி20 தொடர் விளையாடப்படுகிறது.

இந்தியாவில் நடத்தப்படும் 3-வது மாநில மட்ட டி20 கிரிக்கெட் தொடராகும் இது. இதில் தினேஷ் கார்த்திக், அஸ்வின், எல்.பாலாஜி போன்ற சர்வதேச வீரர்களும் அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்து கொண்ட பிற மாநில வீரர்களான பியூஷ் சாவ்லா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் டிஎன்பிஎல் தொடக்க வரைவில் இடம்பெறவில்லை. பிசிசிஐ உறுதி அளித்தவுடன் இவர்கள் பின்னால் இணையலாம்.

மைக்கேல் பெவன், லான்ஸ் குளூஸ்னர் ஆகியோர் இரு அணிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

அணிகளும் உரிமையாளர்களும்:

அணி உரிமையாளர்கள் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்கள் ஊர்களை அணிகளாகத் தேர்ந்தெடுக்கலாம். இதில் 5.21 கோடியுடன் அதிக பட்ச தொகையுடன் கோரியுள்ள தூத்துகுடி ஸ்போர்ட்ஸ் தூத்துக்குடி அணியை நடத்துகிறது.

தந்தி தொலைக்காட்சியின் உரிமையாளரான மெட்ரோநேஷன் சென்னை டெலிவிஷன் நிறுவனம் 5.13 கோடி தொகையுடன் தெற்கு சென்னையை தேர்வு செய்துள்ளது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் (ரூ.5.01 கோடி) கோயம்புத்தூரைத் தேர்வு செய்ய, கோத்தாரி (மெட்ராஸ்) லிமிடெட் (ரூ.4.001 கோடி) மதுரையை தேர்வு செய்துள்ளது. ரூபி பில்டர்ஸ் (ரூ.3.69 கோடி) காஞ்சிபுரம் அணியை தேர்வு செய்துள்ளது.

முன்னாள் இந்திய வீரர் வி.பி.சந்திரசேகர் (ரூ.3.48 கோடி), திருவள்ளூரைத் தேர்வு செய்துள்ளார்.

டேக் சொல்யுஷன்ஸ் (ரூ.3.42 கோடி), திண்டுக்கல் அணியையும், செட்டிநாடு அப்பேரல்ஸ் (ரூ.3.3 கோடி) காரைக்குடி அணியையும் தேர்வு செய்துள்ளன.

டிஎன்பிஎல்-பொருளாதாரம் என்ன?

இந்தத் தொடரில் நிறைய பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.33கோடி பெற்றுள்ளது.

உரிமையாளருக்கான அடிப்படை விலை 10 ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1.25 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அணி உரிமையாளர்களுக்கு வீரர்கள் சுழற்சி முறையில் அளிக்கப்படுவர். ஒரு கிரிக்கெட் வீரர் மீது அதிக தொகை கோரும் அணிக்கு அந்த வீரர் செல்வார்.

முதல் 5 ஆண்டுகளுக்கு அனைத்து மைய உரிமைகள் தொகையில், ஆட்டம் நடத்தப்படும் செலவுகள் கழித்தது போக மீதி தொகையில் 80% 8 அணிகளிடையே பகிர்ந்து கொள்ளப்படும். மீதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குச் செல்லும்.

இதில் 65% அணிகளுக்கிடையே சமவிகிதத்தில் பகிரப்படும். 15% தொகை இந்த லீகில் அணிகள் அடையும் நிலைக்கு ஏற்ப பிரித்தளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பதிவு செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்களே போட்டிக்குத் தகுதி உடையவர்கள்.

இந்திய வீரர்களுக்கு அதிகபட்ச சம்பளமாக ரூ.5.லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு ஆடும், ஆடிய வீரர்களுக்கு அதிகபட்ச ஊதியமாக ரூ.2.50 லட்சமும் மற்ற வீரர்களுக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சர்வதேச வீரர்கள் அல்லது முதல் தர கிரிக்கெட் வீரர்கள், அல்லது இவர்களது உறவினர்கள் ஆகியோர் அணியை ஏலம் எடுக்க அனுமதி கிடையாது.

ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி இந்தப் போட்டிகளின் அதிகாரபூர்வ நேரலை ஒளிபரப்பாளர்கள்.

அணிகளும் வீரர்களும்:

தூத்துகுடி:

தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் கிரிஸ்ட், அபினவ் முகுந்த், அவுஷிக் ஸ்ரீநிவாஸ், கவுஷிக் காந்தி, எல்.பாலாஜி, ஆனந்த் சுப்ரமணியம், ஆகாஷ் சும்ரா, சத்யநாராயண், சுஷில், கணேஷ் மூர்த்தி, அதிசயராஜ் டேவிட்சன், மாருதி ராகவ், விஷால், சித்தார்த் அஹுஜா, லஷ்மண், நாதன், நிகுல் ஆனந்த்.

சேப்பாக்கம்:

ஆர்.சதீஷ், யோ மகேஷ், தலைவன் சற்குணம், அந்தோனி தாஸ், கோபிநாத், சாய் கிஷோர், சசிதேவ், ஜோயெல் ஜோசப், தமிழ்க்குமரன், அலெக்சாண்டர், வசந்த் சரவணன், ராகுல், அஷ்வத் முகுந்தன், எஸ்.கார்த்திக், ரஜீல் அப்துல் ரஹ்மான், நிர்மல் குமார், வாசுதேவன், ஆதித்யா பரூவா, ஷிபி ஜவஹர்.

கோயம்புத்தூர்:

எம்.விஜய், சையத் மொகமது, எம்.மொகமது, சூரிய பிரகாஷ், விஜய் சங்கர், சிவகுமார், ரோஹித், விக்னேஷ், அனிரூத் சீதாராம், அஜித் ராம், ஹரிஷ் குமார், அக்‌ஷய் சீனிவாசன், அருண், அன்சித், எம்.கமலேஷ், தருண் ஸ்ரீனிவாஸ், ஆதித்யா கிரிதர், கவுதம் தாமரைக் கண்ணன்.

மதுரை:

அருண் கார்த்திக், சுரேஷ் குமார், தியாகராஜன், பிரான்ஸிஸ் ரோகின்ஸ், சந்திரசேகர், விக்னேஷ் கணபதி, ராஜா, ஷிஜித் சந்திரன், எல்.விக்னேஷ், மான் கே. பாஃப்னா, முருகரத்னம், அஸ்வின் குமார், அமர்நாத், வருண் நரேந்தர், சக்தி, ஆண்டன் ஆண்ட்ரூ சுபிக்‌ஷன், மிஹிர், எட்வர்ட் கென்னடி, சி.மது.

காஞ்சிபுரம்:

இந்திரஜித், கவுஷிக், ஜெசுராஜ், ஷாருக்கான், பாரத் சங்கர், பார்த்திபன், வருண் குமார், பிரபு, ஜே.கவுஷிக், எல்.கணேஷ், ஆதித்யா கணேஷ், எஸ்.சித்தார்த், ஆர்.சுதேஷ், நிலேஷ் சுப்பிரமணியன், அகில் ஸ்ரீநாத், பிரதோஷ் ரஞ்சன் பால், மிட்செல் ஆண்டனி மன்னேஸ், திரிலோக் நாக், பி.ஆதித்யா.

திண்டுக்கல்:

ஆர்.அஸ்வின், எம்.அஸ்வின், டி.நடராஜன், சஞ்சய், ஜகதீசன், கங்கா ஸ்ரீதர் ராஜு, சுப்பிரமணிய சிவா, சன்னி குமார் சிங், கே.முகுந்த், வில்கின்ஸ் விக்டர், அஸ்வின் வெங்கட்ராமன், ஷியாம் சுந்தர், எஸ்.தினேஷ், யாழ் அருண் மொழி, பிரசாந்த் பிரபு, எஸ்.அபிஷேக், ஆர்.விவேக், ஆதித்யா அருண், எம்.சிலம்பரசன்.

திருவள்ளுவர்:

பி.அபராஜித், அபிஷேக் தன்வர், ராஹில் எஸ்.ஷா, ஆர்.கவின், சதுர்வேத், மலோலன் ரங்கராஜன், ஆர்.ரோஹித், ஜகனாத் ஸ்ரீனிவாஸ், ஜி.வி.விக்னேஷ், சஞ்சய் யாதவ், எஸ்.அருண், சாம்ருத் பட், ஹரி நிசாந்த், லஷ்மிநாராயண், கோவிந்தராஜ், ஆர்.சிலம்பரசன், யு.முகிலேஷ், எஸ்.சாமுவேல், சந்தோஷ் ஷிவ்.

காரைக்குடி:

எஸ்.பத்ரிநாத், எஸ்.அனிருதா, சுனில் சாம், சுரேஷ் பாபு, லோகேஷ்வர், கணபதி சந்திரசேகர், ஷோயப் கான், விஷால் வைத்யா, சோனு யாதவ், ராஜ்குமார், மோஹன் பிரசாத், விஜய் குமார், எம்.அபினவ், ஏ.ஜெரோம், ஆர்.ஸ்ரீநிவாசன், கிரண் ஆகாஷ், சுஜய், சுவாமிநாதன், ஷாஜகான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x