அனைத்து வடிவங்களிலும் பும்ரா உலகின் சிறந்த வீச்சாளராக முடியும்: ஷேன் பாண்ட் நம்பிக்கை

அனைத்து வடிவங்களிலும் பும்ரா உலகின் சிறந்த வீச்சாளராக முடியும்: ஷேன் பாண்ட் நம்பிக்கை
Updated on
1 min read

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இறுதி ஓவர்களை அபாரமாக வீசுவதில் லஷித் மலிங்காவை பின்னுக்குத் தள்ளியவர் ஜஸ்பிரித் பும்ரா. இதனையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் பும்ரா நுழைவார் என்று நியூஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது,

“பின்னால் பும்ரா வீசப்போகிறார் என்பதை வைத்தே நாங்கள் எங்கள் பந்து வீச்சைத் தீர்மானித்தோம். மலிங்காவை நடு ஓவர்களில் பயன்படுத்தினோம். லெக்ஸ்பின்னருடன் கொஞ்சம் எதிரணிக்கு நெருக்கடி அளிக்கும் பந்து வீச்சையும் கடைபிடித்தோம்.

ஜஸ்ப்ரித் பும்ராவை வைத்து ஒரு அணி தங்கள் பந்து வீச்சு வரிசை, மாற்றங்களைத் தீர்மானிக்கிறது என்றால் அது அவருடைய தரநிலையை நமக்கு உணர்த்துகிறது. அவர் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவார், அனைத்து வடிவங்களிலும் தலைசிறந்த பவுலராக அவர் விளங்குவார் என்று நான் நம்புகிறேன்” என்றார் ஷேன் பாண்ட்.

அணித்தலைவர் ரோஹித் சர்மா கூறும்போது, “பும்ரா உலகின் நம்பர் 1 பவுலர் என்று கூறி அவரை அழுத்தத்திற்குள்ளாக்க வேண்டாம் என்று கருதுகிறேன். இப்போதைக்கு அவர் அருமையாக வீசி வருகிறார், இப்படியே இவர் தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

சூப்பர் ஓவரில் சிறந்த டி20 பேட்ஸ்மென்களான மெக்கல்லம், ஏரோன் பிஞ்ச் ஆகியோருக்கு அவர் வீசி 11 ரன்களை சிறப்பாகத் தடுத்திருக்கிறார். ஆகவே நம்பர் 1 பவுலராக அவர் திகழ திறமை உடையவர்தான்” என்றார்.

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் பும்ரா மீதான எதிர்பார்ப்பு கடுமையாக கூடியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in