Published : 16 Aug 2016 09:03 AM
Last Updated : 16 Aug 2016 09:03 AM

400 மீட்டர் ஓட்டத்தில் தெ.ஆ வீரர் சாதனை

ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென் ஆப்ரிக்க வீரர் புதிய உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் தென் ஆப்ரிக்க வீரர் வான் நிகெர்க் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை புரிந்தார். அவர் பந்தய தூரத்தை 43.03 விநாடியில் கடந்து தங்கம் வென்றார்.

இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சன் 43.18 விநாடியில் கடந் ததே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால உலக சாதனையை தற்போது நிகெர்க் முறியடித் துள்ளார்.

மேலும் ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். கிரீனிடாவின் ஜேம்ஸ் 43.76 விநாடியில் இலக்கை கடந்து வெள் ளியும், அமெரிக்காவின் மெரிட் 43.85 விநாடியில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x