ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - புனே இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - புனே இன்று மோதல்
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் புனே சிட்டி அணியும் மோதவுள்ளன.

புனேவிலுள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸ் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. சென்னை அணி, இதுவரை ஆடிய 6 மேட்சுகளில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது (2 டிரா மற்றும் 1 தோல்வி). அதேபோல, புனே அணி, ஆடிய 6 மேட்சுகளில் 3-ல் வெற்றி பெற்று இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது (1 டிரா). சென்னை அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் புனே அணி 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

கடந்த 2 ஆட்டங்களிலும் சென்னை அணி டிரா மட்டுமே கண்டுள்ளது. ஆனால், புனே அணி கடந்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in