உலகக் கோப்பை கபடி அக்.7-ம் தேதி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா மோதல்

உலகக் கோப்பை கபடி அக்.7-ம் தேதி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா மோதல்
Updated on
1 min read

உலகக் கோப்பை கபடி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது.

உலகக் கோப்பை கபடி போட்டி அகமதாபாத்தில் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்திய அணியுடன், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், போலந்து, தாய்லாந்து, வங்க தேசம், தென் கொரியா, ஜப்பான், அர்ஜென்டினா, கென்யா ஆகிய 12 அணிகள் கலந்து கொள் கின்றன.

இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், தென் கொரியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளும், பி பிரிவில் ஈரான், தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, போலந்து, கென்யா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

அரை இறுதி ஆட்டங்கள் 21-ம் தேதியும், இறுதிப் போட்டி 22-ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அட்டவணை மற்றும் சின்னம் வெளியீடு டெல்லியில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், போட்டி அட்டவணை மற்றும் போட்டியின் சின்னத்தையும் வெளியிட்டார். 7-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 3-வது ஆட்டத்தில் 11-ம் தேதி வங்கதேசத்தையும், 4-வது ஆட்டத் தில் 15-ம் தேதி அர்ஜென்டினா வையும், கடைசி லீக் ஆட்டத்தில் 18-ம் தேதி இங்கிலாந்து அணியையும் சந்திக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in