

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி காயம் காரணமாக விலகினார்.
நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, தோனிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
ஆசிய கோப்பையில் தோனிக்கு பதில் விராட் கோலி அணியை வழிநடத்துவார். தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங்கை கவனிப்பார்.
வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பைத் தொடரில், இந்திய அணி இம்மாதம் 26-ம் தேதி தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.
இந்தத் தொடரின் முடிவில், ஐசிசி டிவென்டி 20 உலகக் கோப்பையும் வங்கதேசத்தில் மார்ச் 21-ல் தொடங்குகிறது.